Tuesday, January 18, 2011

ஸ்ரீ பூண்டி மகான் sri poondi mahan

             இருபதாம் நுற்றாண்டு இறுதியில் தென்  தமிழகத்தில்   நினைக்க முக்தி தரும் திருவண்ணமலைக்கு அருகில் போளூர் தாலுகா கலசபாக்கதில் இருந்து  3 கி.மீ தொலைவில் ஒரு ஞானி  இருந்தார்.  அவருக்கென்று பேர் கூட கிடையாது. ஜீவ முக்தி அடைவதற்கு முன்பு சில காலம் பூண்டி கிராமத்தில் தங்கி இருந்ததால் பூண்டி மகான் என்றும், பூண்டி சாமியார் என்றும் மக்கள் அழைக்கலாயினர். சேயாற்றின் கரையில் பெரும்பாலும் இருப்பார் என்பதால் பூண்டி மகான் ஆற்றுசுவாமிகள் என்றும் அழைக்கலாயினர்.

ஊரிலான்;ஒரு பேரிலான்
             எப்பொழுது  இந்த பகுதிக்கு வந்தார்?,எங்கிருந்து வந்தார்?, என எவ்வித தகவலும் கிடையாது. அவருடைய பெற்றோர் யார்?, உற்றார் உறவினர் யார்? என எந்த ஒரு செய்தியும் ஒருவருக்கும் தெரியாது.
              சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு  முன்பு  கலசபாக்கம், குருவிமலை  சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்பட தொடங்கியாதாக சிலர் கூறுகின்றனர். மனம் போன போக்கில் பிச்சைக்காரர் போன்று திரிந்து கொண்டு. எவ்வித ஆன்மிக அடையாளமும் இன்றி இருந்ததால் பொது மக்கள்  யாரும் கவனிக்கவும்  இல்லை கண்டுகொள்ளவும் இல்லை .  
             அவரது செய்கைகள்  சிலருக்கு பைத்தியக்காரத்தனமாக தோன்றியது.அவர்கள் அவரை ஏளனம் செய்த  போதும் எதிர்ப்போ  மறுப்போ  கூறாமல் அமைதியாக அங்கிருந்து sendru   விடுவார். புற உலக சிந்தனை இன்றி சுயம்பாக  இருப்பதை  ஒரு சில ஆன்மிக பெரியவர்கள் கவனிக்கலாயினர்.